Monday, February 1, 2010

அழகிரி அண்ணனை ஆற்றில் இறக்கிய அல்லக்கைகள்


விழவு மலிமூதூர் என்ற பெயர் மதுரைக்கு உண்டு. காரணம், மதுரையில் தினமும் ஏதாவது விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். விழாக் கொண்டாட்டங்களால் மதுரை நகரம் களை கட்டி இருக்குமாம். இப்படி விழாக்கள் மலிந்து இருந்த ஊரால் விழவு மலிமூதூர் என்று மதுரையை சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இப்படி நடக்கும் விழாக்களில் சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு புகழ்பெற்றது. பெருமாள் ஆகிய அழகர் தனது தங்கையான மீனாட்சியின் திருமண விழாவைக் காண மதுரையின் வடக்குதிசையிலிருக்கும் அழகர் மலையில் இருந்து கிளம்பி மதுரையின் தெற்கு பக்கத்திலிருக்கும் கோயிலுக்கு குதிரையில் வருகிறார். வடக்கையும், தெற்கையும் நடுவில் ஓடும் வைக ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றை கடக்கும் போது அழகர் உடுத்தியிருக்கும் ஆடையின் நிறத்தை கொண்டு தான், அந்த ஆண்டு நாட்டில் நல்ல மழை பெய்து செழிப்பு ஏற்படும்.
உதாரணமாக அழகர் தங்ககுதிரையில் அமர்ந்து பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பயிர்கள் விளைந்து செழிக்கும் என்பது ஐதீகம். சிவப்பு பட்டு உடுத்தி இறங்கினார் என்றால், வறட்சி வரப்போகிறது என்று பொருள்.

இப்படி இருக்கும் நிலையில், அழகருக்கு பதிலாக தை மாதத்தில் அழகிரி ஆற்றில் இறங்கும் வைபவம் மதுரையில் நடைபெற்றது. அழகிரியின் அல்லக்கைகள் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். அல்லக்கைகளின் வருமானம் செழிக்க வேண்டும் என்பதற்காக, அழகிரி பச்சை பட்டு உடுத்தி ஆற்றில்???(திருமண மண்டபத்தில் நடந்த விழாவில்) இறங்கினார். விளைவு அல்லக்கைகள் காட்டில் மழை.

Saturday, January 30, 2010

குடும்ப பாசம் இப்படி தான் இருக்கணும் -கலைஞர் பேரன் சினிமாவுக்கு தயாளு அம்மாள் பூஜை


கலைஞர் மேடையில் தொண்டை தண்ணி வற்ற பேசி கட்சியை வளர்த்தது ஒரு காலம். அவரது குடும்பம் அதே தமிழ் மக்கள் சேவையை நவீனமாக செய்யும் காலம் இது.

Wednesday, January 27, 2010

அழகிரி அண்ணணுக்குஅல்லக்கைகளின் சேர்க்கை தேவையா?

உண்மையிலேயே எனக்கு மத்திய அமைச்சர் அழகிரி மீது எந்த கோபமும் இல்லை. நேரில் சந்தித்து பழகியவர்கள் சொன்னது, அண்ணனை சிலர் தங்கள் கொள்ளைக்கு வசமாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான். அது உண்மையா, இல்லையா என்பது தெரியாது. ஆனால்அண்ணன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவ்வளவு சக்தி வாய்ந்த அண்ணணுக்கு, எந்த வகையிலும் ஒத்து வராத இந்த கொள்ளைகும்பலின், அல்லக்கைகளின் சேர்க்கை தேவையா என்பது தான் மதுரை மக்களை ரொம்பவும் குழப்புகிறது.
இந்த கொள்ளைக்கும்பல் என்பது ,மதுரையில் அண்ணனின் ஆசிர்வாதத்தால் மூச்சா மற்றும் ரெண்டுக்கு போகும் கக்கூஸ் காண்ட்ராக்டுகள், மாநகராட்சி சாக்கடை தோண்டும் வேலைகள் , சைக்கிள் ஸ்டாண்டுகள், கந்து வட்டி கொடுத்து வாங்கும் அறிவு பூர்மான வேலை செய்யும் அறிவுஜீவிகள் போன்ற கழக கண்மணிகள் தான். அண்ணனை சுற்றி அரணாக இருப்பவர்களும் இந்த அல்லகைகள் தான். .
வரும் 30 ம் தேதி அண்ணன் பிறந்த நாள் . இதனை வைத்துக் கொண்டு இந்த அல்லக்கைகள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே....ஆத்தாடியோவ்....மதுரையே பொளந்து போகாதது தான் பாக்கி.
இன்று காலை மதுரை ரோடுகளில் வெள்ளை மினிஸ்டர் சட்டையில் ஆங்காங்கே கடப்பாரை, தட்டுகளுடன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தது இந்த அல்லக்கை கூட்டம். தமிழ் சினிமா பட ரவுடி தோற்றத்தில் இருந்த இவர்களை பார்த்து மதுரை பொதுசனம் மிரண்டு போனது. என்னவோ, ஏதோ என்று திகைத்தது. வந்தது வழக்கமாக அண்ணனின் அல்லக்கைகள். யார் வந்தால் என்ன.. போனால் என்ன என்று வந்திருந்த அல்லக்கைகள் ஆட்களை ஏவி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி குழியை தோண்டினார்கள் . ஏதோ..அம்மன் கோயிலுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டத்தான் போகிறார்கள் என்று எல்லா பொதுசனமும் வேடிக்கை பார்த்தது. ஏனென்றால் மதுரையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இப்படி வேலை நடந்து கொண்டிருக்கும் போதே, எஙகிருந்தோ வந்த அண்ணனின் மேலும் 10 அல்லக்கைகள், கைகளில் 20 அடிநீளத்தில் வைத்திருந்த இரும்பு கம்பிகளில் கோர்த்த திமுக கொடிகளை அந்த குழிகளில் 5 அடிக்கு 5 அடி தூரத்தில் தோண்டப்பட்ட குழிகளில் நட்டு வைத்து விட்டு சிட்டாக பறந்தார்கள். அப்படியே கோயிலை சுற்றியிருந்த கீழமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்குமாசி வீதி உள்பட மதுரையின் முக்கிய இடங்களில் எல்லாம் இப்படி குழியும், அதில் திமுக கொடியுமாக பறக்கிறது.
ஒரே சீராக மதுரை ரோடுகளில் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த கொடிகளை கண்டு மதுரை மக்கள் புளகாஙகிதம் அடைந்தார்கள். காரணம்,
வழக்கமாக மதுரை ரோடுகளில் நாய்கள், கழுதைகள், பன்றிகள் எல்லாம் குறுக்கும் நெடுக்குமாக ஒடும்.

வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு போயிருப்பார்கள். பேய்களை தவிர வண்டியை ஓட்டுபவரின் குறுக்கே எதுவெல்லாம் பாயும் என்று தெரியாது. மிரண்டு போய் வண்டியின் ஓட்டத்தை தவறவிடுபவர்களை பிறகு 108 ஆம்புலன்ஸ் வந்து தூக்கி கொண்டு போகும். தப்பாக நினைக்க கூடாது. சப்இன்ஸ்பெக்டர் வெற்றிவேலுக்கு மட்டும் தான் இந்த 108 ஆம்புலன்ஸ் வராது.
வழக்கமாக இப்படி காணப்படும் மதுரை ரோடுகள் நேற்று முதல் திமுக கொடிகளை சுமந்து கொண்டு பார்க்க அழகாக காட்சி தருகிறது.

ரோட்டின் இருபக்கத்திலும் சீராக கொடிகளை நட்டிருப்பதால், வழக்கமாக குறுக்கே ஓடும் நாய், நரி, குதிரை, கழுதைகள், மாடுகள் எல்லாம் 20 அடி நீள திமுக (சிவப்பை கண்டால் விலங்குகள் பொதுவாக வெறிக்கும்) கொடிகளை பார்த்து மிரண்டு போய் எங்கோ பதுங்கி கொண்டன. வழக்கமான தாறுமாறாக வாகனங்களை ஓட்டும் வாகன ஒட்டிகள் வண்டிகளை சீராக ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். வண்டிகள் சீராக சென்றதால் வழக்கமாக காதைப்பிளக்கும் ஆரன் சத்தம் இல்லை.
மொத்தத்தில் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள். அதானே....அண்ணன் செஞ்ச எதிலயும் ஒரு அர்ததமிருக்குமில.....என்று இரண்டு கைத்தடிகள் பேசிக்கொண்டார்கள். அண்ணனை இந்த மதுரைக்கு பெற்று கொடுத்த கலைஞர் ஐயா பல்லாண்டு வாழ மீனாக்ஷி அம்மனை வாழ்த்தி போற்றினார்கள்.

( குறிப்பு ) நான்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக பொருளாளர் பதவி தனக்கு தரப்படவேண்டும் என்பது அண்ணனின் கோரிக்கை.அது நிறைவேற தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் அண்ணன் இருப்பதாக ஜூனியர் விகடனில் சொல்லிவைத்தார்கள் .கிளம்பியது அண்ணன் படை.சீரானது மதுரை போக்குவரத்து. வாழ்க அண்ணன் தொண்டு .வளர்க அவரது திருப்புகழ்.இம்புட்டு தாங்க விஷயம்.

Thursday, June 11, 2009


சினிமா நடிகைகள் தயவு செய்து தங்கள் உடைகளை அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் தமிழ் சமுடயத்தை வாழ வைக்கும் கலைஞரின் மானாட மாயிலாட குத்தாட்ட பெண்களும் உடைகளை அனுப்பி வைக்கலாம் .

Saturday, May 16, 2009

தமிழனுக்கு ஆப்பு


எப்போதும் பெரிதாக எதையும் சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். இதற்காக தான் ஆட்சியில் இருக்கும் போது சில எலும்பு த்துண்டுகளை அவர்களுக்கு வீச வேண்டும்.

தி முகவால் தமிழினத்திற்கு சில பல நிரந்தர எலும்பு துண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புத்துண்டங்கள் தமிழர்களின் வயிற்றுக்குள் போய் செரிமானம் ஆக நீண்ட காலம் ஆகும் .

இந்த நிரந்தர எலும்பு துண்டுகள் எவை என்றால்,
1.
இலவச கலர் டிவி- தமிழர்களின் அறிவை வளர்த்து விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு.
2.
விதவைகளுக்கு உதவி தொகை- டாஸ்மாக்கில் குடித்து விட்டு வயிறு வெந்து செத்து போனவர்களின் சாபத்தை தடுத்துக் கொள்ள
3.
வேலையில்லா இளைஞருக்கு உதவி தொகை - இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் எந்த வேலையும் அரசு வழங்கவில்லையே என்ற கோபத்தை தடுக்க.
4.
சத்துணவில் 3 முட்டை- தமிழர்களின் பிள்ளைகள் என்ன சோமலியாகாரர்களா? குழந்தைகளை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தானே அரசு போடும் சத்துணவை சாப்பிட வேண்டும்? ஓரு முட்டைக்கு 5 காசு கமிஷன் வைத்துக் கொண்டாலும்....ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வழங்கப்படும் முட்டைக்கான கமிஷன் யாருக்கு போய் சேருகிறது?
5.
ரூபாய் 1 க்கு 1 கிலோ அரிசி- இது தான் ரொம்ப பரிதாபம். இந்த அரிசியை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் தமிழன். உழைக்கும் காசை டாஸ்மாக்கில் குடித்து விட்டு , வெற்று பாட்டிலை 1 ரூபாய்க்கு பழைய பாட்டில் கடையில் விற்றுவிட்டு அப்படியே 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டு வீட்டில் படுத்துக் கொள்ளலாம்.
6.
இலவச வேட்டி சட்டை- இதை இஸ்திரி செய்வது முடியாத காரியம். அப்படியே துவைத்து கட்டிக் கொண்டால், நான் கடவுள் அகோரிகள் போல காட்சியளிக்க வேண்டியது தான்.

இப்போது சில தற்காலிக எலும்பு துண்டுகளை பார்க்கலாம்
உலகமே உற்றுபார்க்கும் இந்திய ஜனநாயகம் வெறும் 500 ரூபாய் தாளுக்கு திமுக ஆட்சியில் தான் விலை பேசப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்கள் முழுவதும் வீட்டுக்கு வீடு ரூபாய் நோட்டுக்கவர்கள் வீசி எறியப்பட்டிருக்கின்றன. ஓட்டுகள், ஆட்டுக்கிடாய் பிரியாணிக்கு விலை போயிருக்கிறது.
இந்த
ஜனநாயகமே பிடிக்காமல் 49 வையும் பயன்படுத்த விரும்பாமல் வீட்டுக்குள் பதுங்கி கொண்ட படித்த மேதைகள் எத்தனை பேர்? இப்போது தோற்றவர்கள் எல்லாம் பூஜ்யம் என்ற நிலையில் தோற்றுப் போனார்களா?

இன்றைக்கும்
கூட மதுரை திருமங்கலத்தில் ஓட்டலில் சாப்பிட போடப்படும் இலைகளை கூட சிலர் தூக்கி பார்க்கிறார்கள். பழக்க தோஷம். திருமங்கலம் இடைத்தேர்தலில் இலைக்கு அடியில் தான் பணம் வைத்து பரிமாறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தொடங்கிய பழக்கம் இன்று ஆந்திரா, கர்நாடகா வரை நீண்டிருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளும் இலவசங்களை சொல்லி கூப்பாடு போடுகிறார்கள்.

இந்தியாவில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் எண்ணிக்கை 70 கோடி. நாட்டின் மக்கள் தொகையே 110 கோடி. காங்கிரஸ் நாட்டை ஆண்ட லட்சணம். பிளாடபாரங்களில் வாழும் நபர்களின் எண்ணிக்கை 20 கோடி. மீதமுள்ள 30 கோடி தான் நடுத்தரம். ஒரு சில நூறு பேர் தான் அதாவது, தயாநிதிமாறன்களும், தங்கபாலு, ஜி.கே.வாசன், போன்ற ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துள்ள பணக்காரர்களும்.

மற்ற நம்மை போன்றவர்கள் எல்லாம் மிஞ்சிப் போனால் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி வைத்துக் கொண்டு ஆற்காடு வீரசாமி கரண்ட்டை பிடு்ங்கினால் அழுது புழம்பி கொண்டு முடிந்தால் ஒரு இன்வெர்ட்டரை வாங்கி கொண்டு இங்கு உட்கார்ந்து பதிவு போட வேண்டியது தான். வேறு ஒரு மயி...பிடுங்க முடியாது.

ஈழப்பிரச்சனையின் சாரம் கூட தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டிருக்கிறது. நாளை அமெரி்க்காவின் சிலிகான் வேலியல் மயி...பிடுங்கும் உயர் மட்ட இந்திய தமிழனுக்கு இப்படி நாயடி கதி என்றாலும்..மிஞ்சி போனால் கடிதம், தந்தி தான்.

இப்படி எல்லா வகையிலும்...மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு.