Saturday, May 16, 2009

தமிழனுக்கு ஆப்பு

Categories:


எப்போதும் பெரிதாக எதையும் சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். இதற்காக தான் ஆட்சியில் இருக்கும் போது சில எலும்பு த்துண்டுகளை அவர்களுக்கு வீச வேண்டும்.

தி முகவால் தமிழினத்திற்கு சில பல நிரந்தர எலும்பு துண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புத்துண்டங்கள் தமிழர்களின் வயிற்றுக்குள் போய் செரிமானம் ஆக நீண்ட காலம் ஆகும் .

இந்த நிரந்தர எலும்பு துண்டுகள் எவை என்றால்,
1.
இலவச கலர் டிவி- தமிழர்களின் அறிவை வளர்த்து விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு.
2.
விதவைகளுக்கு உதவி தொகை- டாஸ்மாக்கில் குடித்து விட்டு வயிறு வெந்து செத்து போனவர்களின் சாபத்தை தடுத்துக் கொள்ள
3.
வேலையில்லா இளைஞருக்கு உதவி தொகை - இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் எந்த வேலையும் அரசு வழங்கவில்லையே என்ற கோபத்தை தடுக்க.
4.
சத்துணவில் 3 முட்டை- தமிழர்களின் பிள்ளைகள் என்ன சோமலியாகாரர்களா? குழந்தைகளை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தானே அரசு போடும் சத்துணவை சாப்பிட வேண்டும்? ஓரு முட்டைக்கு 5 காசு கமிஷன் வைத்துக் கொண்டாலும்....ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வழங்கப்படும் முட்டைக்கான கமிஷன் யாருக்கு போய் சேருகிறது?
5.
ரூபாய் 1 க்கு 1 கிலோ அரிசி- இது தான் ரொம்ப பரிதாபம். இந்த அரிசியை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் தமிழன். உழைக்கும் காசை டாஸ்மாக்கில் குடித்து விட்டு , வெற்று பாட்டிலை 1 ரூபாய்க்கு பழைய பாட்டில் கடையில் விற்றுவிட்டு அப்படியே 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டு வீட்டில் படுத்துக் கொள்ளலாம்.
6.
இலவச வேட்டி சட்டை- இதை இஸ்திரி செய்வது முடியாத காரியம். அப்படியே துவைத்து கட்டிக் கொண்டால், நான் கடவுள் அகோரிகள் போல காட்சியளிக்க வேண்டியது தான்.

இப்போது சில தற்காலிக எலும்பு துண்டுகளை பார்க்கலாம்
உலகமே உற்றுபார்க்கும் இந்திய ஜனநாயகம் வெறும் 500 ரூபாய் தாளுக்கு திமுக ஆட்சியில் தான் விலை பேசப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்கள் முழுவதும் வீட்டுக்கு வீடு ரூபாய் நோட்டுக்கவர்கள் வீசி எறியப்பட்டிருக்கின்றன. ஓட்டுகள், ஆட்டுக்கிடாய் பிரியாணிக்கு விலை போயிருக்கிறது.
இந்த
ஜனநாயகமே பிடிக்காமல் 49 வையும் பயன்படுத்த விரும்பாமல் வீட்டுக்குள் பதுங்கி கொண்ட படித்த மேதைகள் எத்தனை பேர்? இப்போது தோற்றவர்கள் எல்லாம் பூஜ்யம் என்ற நிலையில் தோற்றுப் போனார்களா?

இன்றைக்கும்
கூட மதுரை திருமங்கலத்தில் ஓட்டலில் சாப்பிட போடப்படும் இலைகளை கூட சிலர் தூக்கி பார்க்கிறார்கள். பழக்க தோஷம். திருமங்கலம் இடைத்தேர்தலில் இலைக்கு அடியில் தான் பணம் வைத்து பரிமாறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தொடங்கிய பழக்கம் இன்று ஆந்திரா, கர்நாடகா வரை நீண்டிருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளும் இலவசங்களை சொல்லி கூப்பாடு போடுகிறார்கள்.

இந்தியாவில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் எண்ணிக்கை 70 கோடி. நாட்டின் மக்கள் தொகையே 110 கோடி. காங்கிரஸ் நாட்டை ஆண்ட லட்சணம். பிளாடபாரங்களில் வாழும் நபர்களின் எண்ணிக்கை 20 கோடி. மீதமுள்ள 30 கோடி தான் நடுத்தரம். ஒரு சில நூறு பேர் தான் அதாவது, தயாநிதிமாறன்களும், தங்கபாலு, ஜி.கே.வாசன், போன்ற ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துள்ள பணக்காரர்களும்.

மற்ற நம்மை போன்றவர்கள் எல்லாம் மிஞ்சிப் போனால் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி வைத்துக் கொண்டு ஆற்காடு வீரசாமி கரண்ட்டை பிடு்ங்கினால் அழுது புழம்பி கொண்டு முடிந்தால் ஒரு இன்வெர்ட்டரை வாங்கி கொண்டு இங்கு உட்கார்ந்து பதிவு போட வேண்டியது தான். வேறு ஒரு மயி...பிடுங்க முடியாது.

ஈழப்பிரச்சனையின் சாரம் கூட தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டிருக்கிறது. நாளை அமெரி்க்காவின் சிலிகான் வேலியல் மயி...பிடுங்கும் உயர் மட்ட இந்திய தமிழனுக்கு இப்படி நாயடி கதி என்றாலும்..மிஞ்சி போனால் கடிதம், தந்தி தான்.

இப்படி எல்லா வகையிலும்...மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு.

Spread The Love, Share Our Article

Related Posts

1 Response to தமிழனுக்கு ஆப்பு

May 16, 2009 at 12:04 PM

இன்னாமோ, கலைஞ்சறு பண்ண திட்டம் அல்லாமே, செரி இல்லேன்னு கூவுறியே ?

இந்த அம்மா !!!!!!!
அதான் புரட்சி தலைவி(?)
(அது இன்னா புரட்சியோ) பண்ண
கோலக் கூத்த ரவ பாக்கலாமா ???
அல்லாறோம் பீடி புடிக்க கூடாது.

ரெண்டு நாளு அப்பால அந்த சட்டம் வாபஸ்.

மதம் மாத்தக் கூடாது . மூணு

நாள்ல அதுவும் வாபஸ்.

பாக்கு போட கூடாது . நாளு

நாள்ல அதுவும் வாபஸ்.

ஆடு , கோழி வெட்ட கூடாது.

சொம்மா ஒரே மாசம் தான்
அதும் வாபஸ்.

யோவ், பங்க் கடைல பீடி, பாக்கு

விக்காத, இன்னா தான் பண்ணுவாங்கோ ?

கோயில்ல ஆடு வெட்டாத இன்னா
வெட்டுவாங்கோ ? மன்சாலையா
வெட்டுவாங்கோ?

ஆனா, துன்றத்துக்கு மட்டும் வெட்லாமா?

நாட்டுல கீற பிரச்சனை இன்னான்னு பாக்காத, இன்னா இன்னா டாமா கோலி வேல அல்லாம் காட்டுதுபா இந்த அம்மா !!

வேலைல கீற அல்லாரையும், இந்த அம்மா ஊட்டுக்கு அனுப்பிச்சே, இன்னா

முதல்வன் படமா காட்ராங்கோ??

சும்மா உடு வாஜாரே, இக்கரைக்கு அக்கறை பச்ச,

Post a Comment