Saturday, May 16, 2009

தமிழனுக்கு ஆப்பு


எப்போதும் பெரிதாக எதையும் சிந்திக்காதவனாக இருக்க வேண்டும். இதற்காக தான் ஆட்சியில் இருக்கும் போது சில எலும்பு த்துண்டுகளை அவர்களுக்கு வீச வேண்டும்.

தி முகவால் தமிழினத்திற்கு சில பல நிரந்தர எலும்பு துண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புத்துண்டங்கள் தமிழர்களின் வயிற்றுக்குள் போய் செரிமானம் ஆக நீண்ட காலம் ஆகும் .

இந்த நிரந்தர எலும்பு துண்டுகள் எவை என்றால்,
1.
இலவச கலர் டிவி- தமிழர்களின் அறிவை வளர்த்து விஞ்ஞானிகளாக மாற்றுவதற்கு.
2.
விதவைகளுக்கு உதவி தொகை- டாஸ்மாக்கில் குடித்து விட்டு வயிறு வெந்து செத்து போனவர்களின் சாபத்தை தடுத்துக் கொள்ள
3.
வேலையில்லா இளைஞருக்கு உதவி தொகை - இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் எந்த வேலையும் அரசு வழங்கவில்லையே என்ற கோபத்தை தடுக்க.
4.
சத்துணவில் 3 முட்டை- தமிழர்களின் பிள்ளைகள் என்ன சோமலியாகாரர்களா? குழந்தைகளை பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் தானே அரசு போடும் சத்துணவை சாப்பிட வேண்டும்? ஓரு முட்டைக்கு 5 காசு கமிஷன் வைத்துக் கொண்டாலும்....ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் வழங்கப்படும் முட்டைக்கான கமிஷன் யாருக்கு போய் சேருகிறது?
5.
ரூபாய் 1 க்கு 1 கிலோ அரிசி- இது தான் ரொம்ப பரிதாபம். இந்த அரிசியை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் தமிழன். உழைக்கும் காசை டாஸ்மாக்கில் குடித்து விட்டு , வெற்று பாட்டிலை 1 ரூபாய்க்கு பழைய பாட்டில் கடையில் விற்றுவிட்டு அப்படியே 1 ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டு வீட்டில் படுத்துக் கொள்ளலாம்.
6.
இலவச வேட்டி சட்டை- இதை இஸ்திரி செய்வது முடியாத காரியம். அப்படியே துவைத்து கட்டிக் கொண்டால், நான் கடவுள் அகோரிகள் போல காட்சியளிக்க வேண்டியது தான்.

இப்போது சில தற்காலிக எலும்பு துண்டுகளை பார்க்கலாம்
உலகமே உற்றுபார்க்கும் இந்திய ஜனநாயகம் வெறும் 500 ரூபாய் தாளுக்கு திமுக ஆட்சியில் தான் விலை பேசப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்கள் முழுவதும் வீட்டுக்கு வீடு ரூபாய் நோட்டுக்கவர்கள் வீசி எறியப்பட்டிருக்கின்றன. ஓட்டுகள், ஆட்டுக்கிடாய் பிரியாணிக்கு விலை போயிருக்கிறது.
இந்த
ஜனநாயகமே பிடிக்காமல் 49 வையும் பயன்படுத்த விரும்பாமல் வீட்டுக்குள் பதுங்கி கொண்ட படித்த மேதைகள் எத்தனை பேர்? இப்போது தோற்றவர்கள் எல்லாம் பூஜ்யம் என்ற நிலையில் தோற்றுப் போனார்களா?

இன்றைக்கும்
கூட மதுரை திருமங்கலத்தில் ஓட்டலில் சாப்பிட போடப்படும் இலைகளை கூட சிலர் தூக்கி பார்க்கிறார்கள். பழக்க தோஷம். திருமங்கலம் இடைத்தேர்தலில் இலைக்கு அடியில் தான் பணம் வைத்து பரிமாறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தொடங்கிய பழக்கம் இன்று ஆந்திரா, கர்நாடகா வரை நீண்டிருக்கிறது. அங்குள்ள அரசியல்வாதிகளும் இலவசங்களை சொல்லி கூப்பாடு போடுகிறார்கள்.

இந்தியாவில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் எண்ணிக்கை 70 கோடி. நாட்டின் மக்கள் தொகையே 110 கோடி. காங்கிரஸ் நாட்டை ஆண்ட லட்சணம். பிளாடபாரங்களில் வாழும் நபர்களின் எண்ணிக்கை 20 கோடி. மீதமுள்ள 30 கோடி தான் நடுத்தரம். ஒரு சில நூறு பேர் தான் அதாவது, தயாநிதிமாறன்களும், தங்கபாலு, ஜி.கே.வாசன், போன்ற ஆயிரக்கணக்கான கோடிகளை வைத்துள்ள பணக்காரர்களும்.

மற்ற நம்மை போன்றவர்கள் எல்லாம் மிஞ்சிப் போனால் ஒரு கம்ப்யூட்டரை வாங்கி வைத்துக் கொண்டு ஆற்காடு வீரசாமி கரண்ட்டை பிடு்ங்கினால் அழுது புழம்பி கொண்டு முடிந்தால் ஒரு இன்வெர்ட்டரை வாங்கி கொண்டு இங்கு உட்கார்ந்து பதிவு போட வேண்டியது தான். வேறு ஒரு மயி...பிடுங்க முடியாது.

ஈழப்பிரச்சனையின் சாரம் கூட தெரியாத அளவிற்கு மறைக்கப்பட்டிருக்கிறது. நாளை அமெரி்க்காவின் சிலிகான் வேலியல் மயி...பிடுங்கும் உயர் மட்ட இந்திய தமிழனுக்கு இப்படி நாயடி கதி என்றாலும்..மிஞ்சி போனால் கடிதம், தந்தி தான்.

இப்படி எல்லா வகையிலும்...மொத்தத்தில் தமிழனுக்கு ஆப்பு.

யார் புத்திசாலி? சிவகங்கை மக்களா? சிங்கார சென்னை மக்களா? மதுரை மக்களா?



அதிபுத்திசாலிகளாக உலக அரசியலை அலசும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, இந்த தேர்தல் சரியான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தேர்வு செய்த மக்களுக்கு நல்ல கல்வி, வாழ்விடம், சுகாதாரம் என்ற மூன்றையும் தருவது ஒரு சிறந்த ஜனநாயக அரசின் கடமை என்பதை மறந்த போன மக்கள் அல்லது இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டுவருவது தான் ஒரு அரசின் லட்சணம் என்பதை சொல்லித்தராமல் சீனாவையும், உலக பொருளாதாரத்தையும் உள்நாட்டில் உயர்த்தி பேசி மக்களை குழப்பிய கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு தாங்களே மண்ணை வாரி தலையில் போட்டுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மதுரையில் மூன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சபதமிட்ட அழகிரி ஒரு லடசத்தி சொச்சம் ஓட்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டி இட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மோகன் தோல்வியை தழுவினார் .
ரவுடிகளை
தான் தனது பக்கபலமாக வைத்துக் கொண்டு மக்களை மாங்காய் மடையர்களாக்கி ஜனநாயத்தை கேலிக்கூத்தாக்கி, மக்களை பிரியாணிக்கு கையேந்தும் பிச்சைக்காரர்களாக, கேவலமாக பிறவிகளாக மாற்றி ஜனநாயத்தின் மாண்பை சீர்குலைத்தவர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்ட அழகிரி தமிழ்நாட்டில் அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது வெற்றி மதுரையில் அமைதியை விரும்பும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அழகிரியை சுற்றிஇருப்பவர்களில் எண்பது சதவிகிதம் பேர் ரவுடிகள் என்பது ஊரறிந்த உண்மை. கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியை குழாயில் தண்ணீர் பிடிக்கும் சண்டைக்காக வெட்டிக் கொன்ற மருது, தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் சிக்கிய மன்னன், திருட்டு பொருட்களை விற்பனை செய்து வந்த கோபிநாதன், பல குற்றவியல் வழக்குகளில் சம்பந்தபட்டுள்ள எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி, சமீபத்தில் தேர்தல் நிதி தரவில்லை என்பதால் மதுரையின் பிரபல டாக்டரை அரிவாளால் மண்டையை பிளந்த அட்டாக் பாண்டி என்று பல ரவுடிகள் அழகிரியின் நண்பர்களாக உலாவருவது மதுரை மக்களில் பலரும் அறிந்த உண்மை.
இவர்களில்
அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அரசு சம்பந்தப்பட்ட பதவிகள் அழகிரியின் புண்ணியத்தால் கிடைத்து தற்போது சிவப்பு சைரன் காரில் வலம் வருகிறார்கள் என்பதும் உண்மை. நீதி தவறி விட்டோம் என்று வருந்தி தன்னையே மாய்த்துக் கொண்ட பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மதுரையில் பல பேரை அரிவாளால் போட்டு தள்ளிய ரவுடிகளை கைவசம் வைத்திருக்கும் அழகிரி எப்படி வெற்றி பெற முடிந்தது?
அந்தோ
பரிதாபம். உழைக்கும் வர்க்கம் நிறைந்திருக்கும் இந்த நகரில் இலவச டிவி, 1 ரூபாய் அரிசி, ஓசி பிரியாணி, உடன்பிறப்புக்கும், உடன்பிறப்பாக அல்லாமல் ஊத்துக்கு வந்து சேரும் புதிய நபர்களுக்கும் குவார்ட்டருக்கு பேட்டா, தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஐநூறு ரூபாய் பணம் ஆகியவை நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.நல்ல அரசியல் வாதிகளால் இந்த பிஸ்கோத்துகளை எல்லாம் எளிதாக மக்களுக்கு வழங்க முடயும் என்று புரிய வைக்க முடியாமல் போனது கம்யூனிஸ்டுகள் செய்த தவறு.
கலைஞர்
கொண்டு வந்த பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்தை சிறிது உருமாற்றி மதுரை மக்களிடம் புகுத்தினால் கலைஞரின் வாரிசுகள் மதுரையில்இனி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கலாம். மதுரை மாக்கான் என்பது இதுதானோ?

அடுதத்தாக தயாநிதி மாறன் பற்றி பார்க்கலாம். சாதாரணமாக சிடி விற்பனையில் தனது வாழ்க்கையை தொடங்கிய தயாநிதி மாறன்களின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள். கூடவே தாத்தா புண்ணியத்தால் எம்பி பதவி. அதில் ஏராளமான ஊழல்.
இது
போதாது என்று பதவியை பிடிக்கும் நாடகத்தில் தினகரன் தீவைத்து எரிப்பு, அதற்கு பிறகு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க சேர்ந்த தாத்தாவுடன் சேர்ந்த மாறனுக்கு இப்போதும் வெற்றி. இனி ஏதாவது ஒரு அமைச்சர் பதவி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாறனுக்கு கிடைக்கலாம்.
ஏற்கனவே குபேரனாக மாறிவிடடிருக்கும் மாறன்களை தேர்வு செய்ததன் மூலம், இவர்களை இன்னும் மேல் குடிமக்களாக ஆக்கிவிட வாக்களித்து அம்பானிகளை தாண்டி சொத்து சேர்க்கும் அளவுக்கு பதவியை கொடுத்த புண்ணியத்தை கட்டிக் கொண்டுள்ளார்கள் மத்திய சென்னை மக்கள்.
இவர் வெற்றி பெற்றதை நினைத்து இந்த நேரம் டாட்டா பயப்பட தொடங்கியிருப்பார். காரணம், ஏற்கனவே டாட்டா மாறனால் மிரடடப்பட்டவர். உளவியல் ரீதியாகவே பார்த்தால் கூட இவர்களுக்கு இருக்கும் தொழில்களை கட்டிக் காப்பாற்றிக் கொள்ளவே இவர்களுக்கு நேரம் போதாது. இந்த தயாநிதி மாறன் எப்படி மக்கள் பிரச்சனையை சிந்திக்க முடியும்? அதிபுத்திசாலிகள்(???) மத்திய சென்னை மக்கள். இனி நிட்சயமாக அரசு கம்பிவட தொலைகாட்சி வரவே வராது.

சிவகங்கை சீமான .சிதம்பரத்தின் நிலை தான் பரிதாபம். உள்ளாட்சி துறையை கவனித்தவருக்கு உள்ளூரை கவனிக்க நேரமில்லை. இன்று வரை சிவகங்கை மாவட்டத்தில் தேங்காய் நாரை உரித்து கயிறு பின்னும் தொழிலை தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்த மாதிரி தெரியவில்லை.
ஏற்கனவே
இருந்த பல நூற்பாலைகள் மூடப்பட்டு அந்த இடங்களில் இருந்த சாமான்கள் எல்லாம் பழைய ஈயம் பித்தளை, பேரீச்சம் பழத்திற்கு விற்கப்பட்டு விட்டன. நாளுக்கு நாள் சிவகங்கை நசிந்து வருவதை அல்லது பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் பசிபட்டினியால் அவதிப்படும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க தேசத்து நாடுகளை போன்ற நிலையில் இருப்பதை காண முடியும்.
மதுரையிலிருந்து
பல நாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்காண நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சிவகங்கை மண்ணில் எந்த இடத்தில் தோண்டினாலும் கிராபைட் வளம் கொட்டிக்கிடக்கிறது என்று தெரிந்தும் அதை சிவகங்கை சீமான் சிதம்பரம் பல தடவை எம்பீ ஆக இருந்தும் கண்டு கொள்ளாமல் விட்டதும் ஒரு காரணம். வறண்டு போய் கிடக்கும் சிவகங்கையில் வாரத்திற்கு ஒரு வங்கி கிளையை திறந்தது தான் சிதமபரம் செய்த ஒரே நல்ல விஷயம்.
ஆனால்
இந்த வங்கிகளில் யார் பணத்தை கொண்டு வந்து சேமிப்பார்கள் என்பது தான் கேள்விக்குறி. சிரியாய் சிரித்தது சிவகங்கை. முடிவு...சிதம்பரம் திக்கி திணறி தான் ஜெய்த்தார்.
சபாஷ்..சரியாக சிந்தித்து காங்கிரசுக்கும், கூடவே குடும்பத்தை பார்த்து பார்த்து வளர்த்த திமுக வுக்கும் அல்வா கொடுத்த .....மதுரை, சென்னையை விட செழிப்பு இல்லாத சின்ன ஊரில் அன்றாடம் வயித்துப்பாட்டுக்கு அல்லல் படும் சிவகங்கை மக்கள் தான் புத்திசாலிகள்.
உள்ளாட்சி அமைச்சரையே வாழ்க்கையின் எல்லைக்கு ஓடவிட்டார்கள்.

மதுரை நாமகரணம் மாறுகிறது_-இனி அழகிரி மாவட்டம்

அண்ணன் அழகிரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் இனி மதுரை என்ற நாமகரணம் மாற்றப்பட்டு அழகிரியார் மாவட்டம் என்று அழைக்க உள்ளதாக அழகிரி அல்லகைகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பிச்சிட்டான்கைய...ஆரம்பிசிடயிங்க்க

Thursday, April 23, 2009

அழகிரி அண்ணன் பற்றி மதுரையில் துண்டு பிரசுரம்



இன்றைய மதுரையின் நாடாளுமன்ற வேட்பாளாராக திமுக சார்பில் கருணாநிதியின் செல்லப்பிள்ளை மு.க. அழகிரி நிறுத்தப்பட்டுள்ளார். மதுரை அதிமுக பிரமுகர் பசும் பொன் பாண்டியன் அழகிரி யார் என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை மதுரை மக்களிடம் விநியோகித்துள்ளார்.இதோ...


மதுரை முரசொலி அலுவலகத்தை கவனித்துக் கொள்ள நீ தான் சரியான ஆள் என்று சொல்லி அழகிரியை, கருணாநிதி ரயிலேற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1980. அழகிரியின் கையில் அப்போது இருந்த தொகை ரூ.81 ஆயிரம். அழகிரி வந்த உடனே ஆட்டம கண்ட மதுரையின் முரசொலி பதிப்பு சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது.
இனி சென்னைக்கு போவதும் கடினம். அங்கு ஏற்கனவே ஏராளமான வாரிசுகள் கலைஞரை சுற்றி கும்மியடிக்கும் போது, தானும் கூட்டத்தோடு கோயிந்தா போடுவது ஆகாது என்று நினைத்த அழகிரி, மதுரையிலேயே காலூன்ற முடிவு செய்கிறார்.
இதற்கடுத்து
தனது சொத்து சேர்க்கும் படலத்தைதொடங்குகிறார்.
கருணாநிதி எப்போதெல்லாம் முதலைமச்சர் பதவியில் இருந்தாரோ...அப்பொழுதெல்லாம் மு.க.அழகிரி தென்மாவட்டங்களின் நிழல் முதலமைச்சராக இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறையினர், அதிகாரிகள் ஆகியோரை ஆட்டிப்படைத்து சொத்துக்களை மெல்ல குவிக்கிறார். சென்னையிலிருந்து தன்னந்தனியாக ரயிலேறிய அழகிரி, ஒரு கட்டத்தில் தமிழக தென்மாவட்டங்களின் அதிபதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
1980 ல், மதுரை திருநகர் 5 வது ஸ்டாப்பில் உள்ள குமாரசாமி என்ற வக்கீ்ல் வீட்டில், பக்தஜனசபையை சேர்ந்த தியாகராசன் என்பவர் அழகிரியை குடிஅமர்த்துகிறார். அழகிரிக்கு டி.எஸ்.பி சண்முகநாதன் என்ற போலீஸ் அதிகாரி துணையாக பாதுகாப்புக்கு இருக்கிறார்.
ஒரு ஆண்டு கழித்து சதுரிய நாராயணன் பிலிம்ஸ் வீட்டிற்கு பின்புறம் அழகிரி குடியேறுகிறார். பின்னர் 1987 ல் மதுரை டி.வி.எஸ் நகரின் அருகில் உள்ள அழகப்பன் நகரில் வந்து குடியேறுகிறார்.

இந்த பகுதி தான் தனது குடும்பத்துடன் வாசம் செய்ய ஏற்ற பகுதி என்று முடிவெடுக்கிறார். உடனே, சென்னையில் தனது பெயரில் தனது தந்தையார் கருணாநிதி வாங்கிப் போட்டிருந்த வீட்டை, நடிகர் சரண்ராஜிடம் 9 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டு மதுரை சத்யசாய் நகரில் 4 ஏ என்ற கதவு எண் உள்ள வீட்டை வாங்குகிறார்.
இந்த வீட்டை கருப்பசாமி என்பவர் மூலமாக மதுரை அரசரடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். இப்போது அழகிரி குடியிருக்கும் அந்த வீட்டின் அப்போதை விலை 4.5 லட்சம் ரூபாய். அந்த வீட்டின் தரைதளம் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனை விலைக்கு வாங்கிய பின்னர் சுமார் 5 கோடி ரூபாய் செலவழித்து வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கிறார். இருந்தாலும், வாங்கிய வீடு போதுமான புழக்கத்திற்கு வசதியாக இடம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்வது என்று சிந்தித்த அழகிரி, அக்கம்பக்கத்தில் யாரையாவது வீட்டை காலி செய்ய வைத்தால் மட்டுமே தனது வீட்டை விஸ்தரிக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்.

அப்போது கண்ணில்படுகிறது அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு அப்பாவி பிராமண பெண்ணின் வீடு. அதனை வாங்க நினைக்கிறார். பூர்வீக வீடான அதனை தர அந்த பிராமண பெண் மறுக்கிறார். பிறகென்ன..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் கதை தான். பாவம்.தலைதெறித்து வீட்டை காலி செய்கிறார் அந்தபிராமண பெண். அழகிரியின் வீடு விஸ்தாரமாகிறது.
இதற்கடுத்து தனது வீட்டுக்கு அருகிலேயே செட்டில் விளையாட ஒரு இடம் வேண்டும் (1996 ம் ஆண்டு) என்று நினைக்கிறார். உடனே சத்யசாய் நகரில் ஒருவரிடம் இருந்த 12 செண்ட் நிலத்தை மிரட்டி ஒட வைத்து வாங்கி விடுகிறார். இந்த மூன்று சொத்துக்களையும் தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கி சுகபோகமாக வாழ தொடங்குகிறார். இது மட்டுமா..எதிர்காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் வந்தால், வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது வீட்டின் பின்புறம் இருந்த 3 ஏக்கர் நிலத்தை, செண்ட் 3 ஆயிரம் என்ற விலையில் தனது மகள் கயல்விழி பெயரில் வாங்கி வைக்கிறார். இதுதவிர மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள சட்டக்கல்லூரி விடுதி அருகில் உள்ள 1 ஏக்கர் காலி இடத்தையும் அழகிரியின் 2 வது மகள அஞ்சுகத்தின் பெயரில் வாங்குகிறார். இது தவிர மதுரையை ஒட்டியுள்ள செழிப்பான தோப்பு பகுதிகள் அழகிரியின் கண்ணில் படுகின்றன. இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள விக்கிரமங்கலம் என்ற இடத்தில் 5 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி அங்கு ஆடம்பர பங்களா, நீச்சல் குளம் கட்டி்யிருக்கிறார். இது மு.க.அழகிரியின் மாமனார் காராளன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடம், அழகிரியின் மாமனார் காராளன் தன்னிடமிருந்த முந்திரி தோப்பை, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி எம்.எல்.ஏ ஜோதிகண்ணனிடம் விற்றுவிட்டு, வி்க்கிரமங்கலத்தில் உள்ள இந்த தென்னந்தோப்பை வாங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்ததோப்பில் உள்ள தென்னை உள்பட மரங்களுக்கு மண் நிரப்புவதற்காக அரசு டிராக்டர்களும், அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். அழகிரி மகன் தயாநிதிக்கு மட்டும் சொத்து இல்லாமல் போகுமா? அழகர் கோயில் செல்லும வழியில் உள்ள கள்ளந்திரி என்ற இடத்தில், அழகிரியின் மகன் தயாநிதி பெயரில் ஒரு தென்னந்தோப்பும், பூவந்தி என்ற இடத்தில் தோடடமும், தோப்புகளும் வாங்கி போடப்பட்டுள்ளன. இது தவிர தென்மாவட்டங்களில் குறிப்பாக, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தான் அதிக அளவில் தோப்புகளும், பண்ணை வீடுகளும் இருக்கின்றன. கொடைக்கானலில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்கள், கட்டப்பட்டுள்ளன. கலைஞர் ஐயா உளியின் ஓசை கதையை இங்கு உட்கார்ந்து சிந்தித்து தான் எழுதினார். கொடைக்கானல் திமுக பிரமுகர் மாயன் வீட்டுக்கு மேற்கில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, இந்த இடத்தை பாராமரிக்க சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அழகிரி இரண்டாவது மகள் அஞசுக செல்வி மற்றும் அவரது கணவர் விவேக் பெயரில் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவும் போதாது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து அங்கு சிறுவர்களை சீரழிக்கும் வீடியோ கேம்ஸ் கடைகளை நடத்தி வருகிறார்.காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் தனது மனைவி காந்திக்கு பட்டுபுடவை விற்கும் கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இது தவிர பினாமிகள் பெயரில், ( மதுரை தங்கமயில் ஜுவல்லரிக்காரர்கள், அழகிரியின் வீட்டுக்கு காய்கறி வாங்கிவரும் பொட்டுசுரேஷ், தாய்மூகாம்பிகை திருமணமகால் நடத்தும் சேதுராமன், வீட்டுக்கு பணி செய்ய வந்து மர்மமான முறையில் இறந்து போன வழக்கில்குற்றவாளியான நாகேஷ்) உள்பட பினாமிகளின் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர அசையும் சொத்துக்களாக பல லட்சம் மதிப்புள்ள லேண்ட்ரோவர் கார் உள்பட ஏராளமான கார்கள் உள்ளன. வெறும் 81 ஆயிரத்துடன் மதுரைக்கு வந்த அழகிரியின் இன்றைய சொத்து மதிப்பை பார்த்து மதுரை மக்கள் மயங்கி விழாத குறை தான்.


தா.பாண்டியன் என்னவோ... தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கை வாங்கி சொத்து குவித்ததாக மீடியாவில் காட்டி என்னவோ பெரிதாக சாதித்து விட்டதாக ....காட்டும் ஐயா கலைஞர் அவர்களே...
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை

ருணாநிதியின்
தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

பக்கம் 81,82 ல்..............
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்................
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்..............................
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.
வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள்