Saturday, May 16, 2009

யார் புத்திசாலி? சிவகங்கை மக்களா? சிங்கார சென்னை மக்களா? மதுரை மக்களா?

Categories:



அதிபுத்திசாலிகளாக உலக அரசியலை அலசும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, இந்த தேர்தல் சரியான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தேர்வு செய்த மக்களுக்கு நல்ல கல்வி, வாழ்விடம், சுகாதாரம் என்ற மூன்றையும் தருவது ஒரு சிறந்த ஜனநாயக அரசின் கடமை என்பதை மறந்த போன மக்கள் அல்லது இது போன்ற நல்ல திட்டங்களை கொண்டுவருவது தான் ஒரு அரசின் லட்சணம் என்பதை சொல்லித்தராமல் சீனாவையும், உலக பொருளாதாரத்தையும் உள்நாட்டில் உயர்த்தி பேசி மக்களை குழப்பிய கம்யூனிஸ்டுகள் தங்களுக்கு தாங்களே மண்ணை வாரி தலையில் போட்டுக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
மதுரையில் மூன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று சபதமிட்ட அழகிரி ஒரு லடசத்தி சொச்சம் ஓட்டுகளில் வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டி இட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மோகன் தோல்வியை தழுவினார் .
ரவுடிகளை
தான் தனது பக்கபலமாக வைத்துக் கொண்டு மக்களை மாங்காய் மடையர்களாக்கி ஜனநாயத்தை கேலிக்கூத்தாக்கி, மக்களை பிரியாணிக்கு கையேந்தும் பிச்சைக்காரர்களாக, கேவலமாக பிறவிகளாக மாற்றி ஜனநாயத்தின் மாண்பை சீர்குலைத்தவர் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்ட அழகிரி தமிழ்நாட்டில் அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இவரது வெற்றி மதுரையில் அமைதியை விரும்பும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், அழகிரியை சுற்றிஇருப்பவர்களில் எண்பது சதவிகிதம் பேர் ரவுடிகள் என்பது ஊரறிந்த உண்மை. கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியை குழாயில் தண்ணீர் பிடிக்கும் சண்டைக்காக வெட்டிக் கொன்ற மருது, தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் சிக்கிய மன்னன், திருட்டு பொருட்களை விற்பனை செய்து வந்த கோபிநாதன், பல குற்றவியல் வழக்குகளில் சம்பந்தபட்டுள்ள எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி, சமீபத்தில் தேர்தல் நிதி தரவில்லை என்பதால் மதுரையின் பிரபல டாக்டரை அரிவாளால் மண்டையை பிளந்த அட்டாக் பாண்டி என்று பல ரவுடிகள் அழகிரியின் நண்பர்களாக உலாவருவது மதுரை மக்களில் பலரும் அறிந்த உண்மை.
இவர்களில்
அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அரசு சம்பந்தப்பட்ட பதவிகள் அழகிரியின் புண்ணியத்தால் கிடைத்து தற்போது சிவப்பு சைரன் காரில் வலம் வருகிறார்கள் என்பதும் உண்மை. நீதி தவறி விட்டோம் என்று வருந்தி தன்னையே மாய்த்துக் கொண்ட பாண்டிய மன்னன் ஆட்சி செய்த மதுரையில் பல பேரை அரிவாளால் போட்டு தள்ளிய ரவுடிகளை கைவசம் வைத்திருக்கும் அழகிரி எப்படி வெற்றி பெற முடிந்தது?
அந்தோ
பரிதாபம். உழைக்கும் வர்க்கம் நிறைந்திருக்கும் இந்த நகரில் இலவச டிவி, 1 ரூபாய் அரிசி, ஓசி பிரியாணி, உடன்பிறப்புக்கும், உடன்பிறப்பாக அல்லாமல் ஊத்துக்கு வந்து சேரும் புதிய நபர்களுக்கும் குவார்ட்டருக்கு பேட்டா, தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஐநூறு ரூபாய் பணம் ஆகியவை நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்று சொல்லலாம்.நல்ல அரசியல் வாதிகளால் இந்த பிஸ்கோத்துகளை எல்லாம் எளிதாக மக்களுக்கு வழங்க முடயும் என்று புரிய வைக்க முடியாமல் போனது கம்யூனிஸ்டுகள் செய்த தவறு.
கலைஞர்
கொண்டு வந்த பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்தை சிறிது உருமாற்றி மதுரை மக்களிடம் புகுத்தினால் கலைஞரின் வாரிசுகள் மதுரையில்இனி வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கலாம். மதுரை மாக்கான் என்பது இதுதானோ?

அடுதத்தாக தயாநிதி மாறன் பற்றி பார்க்கலாம். சாதாரணமாக சிடி விற்பனையில் தனது வாழ்க்கையை தொடங்கிய தயாநிதி மாறன்களின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள். கூடவே தாத்தா புண்ணியத்தால் எம்பி பதவி. அதில் ஏராளமான ஊழல்.
இது
போதாது என்று பதவியை பிடிக்கும் நாடகத்தில் தினகரன் தீவைத்து எரிப்பு, அதற்கு பிறகு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க சேர்ந்த தாத்தாவுடன் சேர்ந்த மாறனுக்கு இப்போதும் வெற்றி. இனி ஏதாவது ஒரு அமைச்சர் பதவி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாறனுக்கு கிடைக்கலாம்.
ஏற்கனவே குபேரனாக மாறிவிடடிருக்கும் மாறன்களை தேர்வு செய்ததன் மூலம், இவர்களை இன்னும் மேல் குடிமக்களாக ஆக்கிவிட வாக்களித்து அம்பானிகளை தாண்டி சொத்து சேர்க்கும் அளவுக்கு பதவியை கொடுத்த புண்ணியத்தை கட்டிக் கொண்டுள்ளார்கள் மத்திய சென்னை மக்கள்.
இவர் வெற்றி பெற்றதை நினைத்து இந்த நேரம் டாட்டா பயப்பட தொடங்கியிருப்பார். காரணம், ஏற்கனவே டாட்டா மாறனால் மிரடடப்பட்டவர். உளவியல் ரீதியாகவே பார்த்தால் கூட இவர்களுக்கு இருக்கும் தொழில்களை கட்டிக் காப்பாற்றிக் கொள்ளவே இவர்களுக்கு நேரம் போதாது. இந்த தயாநிதி மாறன் எப்படி மக்கள் பிரச்சனையை சிந்திக்க முடியும்? அதிபுத்திசாலிகள்(???) மத்திய சென்னை மக்கள். இனி நிட்சயமாக அரசு கம்பிவட தொலைகாட்சி வரவே வராது.

சிவகங்கை சீமான .சிதம்பரத்தின் நிலை தான் பரிதாபம். உள்ளாட்சி துறையை கவனித்தவருக்கு உள்ளூரை கவனிக்க நேரமில்லை. இன்று வரை சிவகங்கை மாவட்டத்தில் தேங்காய் நாரை உரித்து கயிறு பின்னும் தொழிலை தவிர வேறு எதுவும் உருப்படியாக நடந்த மாதிரி தெரியவில்லை.
ஏற்கனவே
இருந்த பல நூற்பாலைகள் மூடப்பட்டு அந்த இடங்களில் இருந்த சாமான்கள் எல்லாம் பழைய ஈயம் பித்தளை, பேரீச்சம் பழத்திற்கு விற்கப்பட்டு விட்டன. நாளுக்கு நாள் சிவகங்கை நசிந்து வருவதை அல்லது பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லாமல் இன்னும் பசிபட்டினியால் அவதிப்படும் சோமாலியா போன்ற ஆப்ரிக்க தேசத்து நாடுகளை போன்ற நிலையில் இருப்பதை காண முடியும்.
மதுரையிலிருந்து
பல நாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்காண நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் சிவகங்கை மண்ணில் எந்த இடத்தில் தோண்டினாலும் கிராபைட் வளம் கொட்டிக்கிடக்கிறது என்று தெரிந்தும் அதை சிவகங்கை சீமான் சிதம்பரம் பல தடவை எம்பீ ஆக இருந்தும் கண்டு கொள்ளாமல் விட்டதும் ஒரு காரணம். வறண்டு போய் கிடக்கும் சிவகங்கையில் வாரத்திற்கு ஒரு வங்கி கிளையை திறந்தது தான் சிதமபரம் செய்த ஒரே நல்ல விஷயம்.
ஆனால்
இந்த வங்கிகளில் யார் பணத்தை கொண்டு வந்து சேமிப்பார்கள் என்பது தான் கேள்விக்குறி. சிரியாய் சிரித்தது சிவகங்கை. முடிவு...சிதம்பரம் திக்கி திணறி தான் ஜெய்த்தார்.
சபாஷ்..சரியாக சிந்தித்து காங்கிரசுக்கும், கூடவே குடும்பத்தை பார்த்து பார்த்து வளர்த்த திமுக வுக்கும் அல்வா கொடுத்த .....மதுரை, சென்னையை விட செழிப்பு இல்லாத சின்ன ஊரில் அன்றாடம் வயித்துப்பாட்டுக்கு அல்லல் படும் சிவகங்கை மக்கள் தான் புத்திசாலிகள்.
உள்ளாட்சி அமைச்சரையே வாழ்க்கையின் எல்லைக்கு ஓடவிட்டார்கள்.

Spread The Love, Share Our Article

Related Posts

1 Response to யார் புத்திசாலி? சிவகங்கை மக்களா? சிங்கார சென்னை மக்களா? மதுரை மக்களா?

May 16, 2009 at 8:53 AM

தங்கள் கருத்து மிகவும் சரியே... என்ன செய்ய..

கோடிகள் செலவழித்தால் வெற்றி அடைய முடியும் என்றும் மக்களை வாங்க முடியும் என்ற நினைப்பு வளர்ந்தால், அவர்களுக்கும் கூடிய விரைவில் மாற்றத்தை சந்திக்க நேரிடும்.


நாட்டைப்பற்றி மட்டும் சிந்தித்தால் பத்தாது.. வீட்டைப் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசாருக்கும், லாலு போன்றோருக்கும் இந்தத் தேர்தலில் புரிந்திருக்கும்.

இதோ எனது அலசலையும் படித்து பாருங்கள்...

Post a Comment